Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாசேத்தியில் தயாராகும் ... சரஸ்வதி பூஜை: மறக்காம இதை செய்யுங்க..! ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதமிருந்த பலன் கிடைக்கும்! சரஸ்வதி பூஜை: மறக்காம இதை செய்யுங்க..! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொண்டிபாளையத்தில் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொண்டிபாளையத்தில் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

18 அக்
2026
11:10

அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் திருவீதியுலா நடந்தது.


மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும், பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை திருவிழா நேற்று  நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு, அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. காலை 10:00 மணி முதல், மதியம் ஒரு மணி வரை, கோவை, திருவேங்கடநாத பெருமாள் கோவில் குழுவின் பஜனை நடந்தது. இரவு 7:00 மணி முதல், 9:00 மணி வரை, கோவை, கிருஷ்ணா நாட்டிய கலாசேத்ரா மாணவ, மாணவியரின், பரதநாட்டியம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் என பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். பக்தர்கள், பலர் தாசர்களுக்கு அரிசி, பருப்பு, படைத்து, பெருமாளை வழிபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், அன்னூர், அவிநாசி, புளியம்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வருகிற 24ம் தேதி புரட்டாசி ஆறாம் சனிக்கிழமை விழா நடைபெறுகிறது. காலை 5:00 மணிக்கு, மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, பசூர் மற்றும் பகத்தூர் குழுவின் பஜனை நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், தபோவனத்தில், நவராத்திரி விழாவின் நிறைவாக அம்பாள் அசுரனை வதம் செய்யும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar