பாலக்காடு ராயிரநல்லுார் மலையேற்றம் பக்தர்கள் திரண்டு பக்திப்பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2026 06:10
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாணி கொப்பம் அருகே உள்ளது ராயிரநல்லுார் மலை. இம்மலை மேல், பந்திருகலத்தின் புனித மனிதனான ‘நாறாணத்து பிராந்தன்’ பிரமாண்ட உருவச் சிலையும் உள்ளது.
சிலையையொட்டி துர்க்கை அம்மனின் கோவிலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ‘மலை ஏற்றம்’ நிகழ்ச்சி நடப்பது பிரபலம். நடப்பாண்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 500 மீட்டர் உயரமுள்ள மலை ஏற, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், அதிகாலை, 4:00 மணி முதல் மலையேறத்துவங்கினர். கல்லும் முள்ளுமான பாதையில் நடைபெறும், இந்த சாகசமாக மலையேற்றம் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கான பயணம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே முதியவர்களும் குழந்தைகளும் மலை ஏற வந்திருந்தனர். பகவதி அம்மன் தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் ‘நாறாணத்து பிராந்தனின்’ உருவச்சிலையை வலம் வந்து மலை இறங்கினர். பக்தர்களை கூட்டம் கட்டுப்படுத்த, 200 போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.