தென்திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் தங்க தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2026 10:10
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இவ்விழாவில், தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன் தினம் சூரிய பிரபை வாகனத்தில் காலையிலும், மாலை சந்திர பிரபை வாகனத்திலும் திருவீதி உலா வந்தார். நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நேற்று நடைபெற்றது. இதில் தங்க தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.