Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா: கோயில்களில் அம்மன் ... திருப்பரங்குன்றத்தில் தங்க குதிரையில் வலம் வந்து அம்பு எய்த முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி: அம்பு எய்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி: அம்பு எய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

20 அக்
2026
08:10

டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை எய்தார்.


பிரதமர் மோடி பேசியதாவது:தீமை வீழ்ந்து  நன்மை வெற்றி பெற்றதை விஜயதசமி கொண்டாடுகிறது.  சத்தியம் மற்றும் நீதியின் அழியாத வலிமையை நமக்கு நினைவூட்டுகிறது. ஏழைகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் சேவை செய்வதே நமது முன்னுரிமை. ராமரின் வாழ்க்கை நமக்கு ஒரு ஆழமான பாடத்தை வழங்குகிறது. நெருக்கடி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது சவால் எவ்வளவு அச்சுறுத்தலாக இருந்தாலும், நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது. நமது சொந்த ஆற்றலை அங்கீகரிக்க வேண்டும். நமது சொந்த வளங்களை நம்ப வேண்டும். நமது உறுதியை வலிமையாக மாற்ற வேண்டும்.  நமது கடின உழைப்பின் மூலம் தீர்வுகளை உருவாக்க வேண்டும். இன்று, நாமும் இந்த  வழிகாட்டுதலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். 


வளர்ந்த இந்தியா மற்றும் தன்னிறைவு பெற்ற பாரதம் ஆகிய இலக்குகளை நாம் முன்வைத்துள்ளோம். நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள். அவர்களை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள் ராமரை நமது முன்னோர்களும், இந்தியாவும் வழிபட்டனர். மனிதகுல வரலாற்றில் ஈடு இணையற்ற லட்சியங்களை ராமர் நமக்கு வழங்கியதால் இந்த நம்பிக்கை உண்டானது. ராமர் தன் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்தாலும், சத்தியம் மற்றும் கொள்கையின் பாதையை கைவிடவில்லை. ராமர், தன் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த போதும், சத்தியம் மற்றும் கொள்கையின் பாதையை ஒரு போதும் கைவிட்டது இல்லை. ராமராஜ்ஜியத்தில் யாருக்கு எதிராகவும் பாகுபாடு இல்லை. அனைவருக்கும் சமமான நீதி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.அதிகாரத்தின் நோக்கம் ஆள்வதற்குஅல்ல. மாறாக பொது மக்களின் நலனை உறுதி செய்வது. அதுவே ராமரின் லட்சியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இதன் பின், ராவண பொம்மையை நோக்கி அம்பை மோடி எய்தார். – நமது டில்லி நிருபர்–

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar