Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் வரதராஜ பெருமாள் ... திருப்பரங்குன்றம் கோயிலில் அம்பாளுக்கு மகா அபிஷேகம்: சகஸ்ரநாம அர்ச்சனை திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாயம் செழிக்க மழையை கொடு தாயே! ஆழியாறில் மனமுருகி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விவசாயம் செழிக்க மழையை கொடு தாயே! ஆழியாறில் மனமுருகி வழிபாடு

பதிவு செய்த நாள்

21 அக்
2026
06:10

ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.


பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், அணைகளின் நீர்மட்டம் சரிந்துள்ளது. குடிநீர் மற்றும் பாசனத்துக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பருவமழை பெய்ய வேண்டி, பி.ஏ.பி., ஆழியாறு, பாலாறு படுகை பாசன விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து, ஆழியாறு அணை கரையில் உள்ள ஆதாளி அம்மன் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில், நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள், பாசன சபை தலைவர்கள் கலசத்தில் கொண்டு வந்த பூஜித்த நீரை, அபிேஷகத்துக்காக பூஜாரியிடம் வழங்கினர். அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அப்போது, மும்மாரி மழை பெய்திடணும், வறண்டு கிடக்கும் பூமி குளிர்ந்திட மழை பெய்யணும், விவசாயம் செழிக்க, மரம், செடிகள் தழைக்க மழை பெய்யணும் தாயே, என, முறையிட்டு வழிபட்டனர்.


திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது: பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு பருவமழை குறைவாக பெய்ததால், இரண்டு, மூன்றாம் மண்டலம் மற்றும் ஆழியாறு பாசனத்துக்கும் ஒன்றரை சுற்று தண்ணீர் மட்டுமே வழங்கும் நிலை உள்ளது.


இந்தாண்டு வறட்சி நிலவுவதால், தென்னை மரங்கள் காய்ந்துள்ளன. இந்நிலையில், மழை வேண்டி ஆழியாறு அணை அருகில் உள்ள பழமையான ஆதாளி அம்மன் கோவிலில், கூட்டுப்பிரார்த்தனை செய்துள்ளோம். கடந்த காலங்களில் இதுபோன்று வறட்சி நீடித்த நேரத்தில், அம்மனுக்கு பிரார்த்தனை நடந்தது. அதன்பின், ஐந்தாண்டுகளாக மழை பெய்து விவசாயம் செழிப்படைந்தது. தற்போது, கடுமையான வறட்சி நிலவுகிறது. கூட்டுப்பிரார்த்தனையால் மழை கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar