இமாச்சலப் பிரதேசத்தில் தீப்பந்த ஒளியில் ஜொலித்த தீபாவளி: பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2026 01:11
தீபாவளி என்றாலே வீடுகளில் ஏற்றப்படும் அகல் விளக்குகளும், வண்ணமயமான பட்டாசுகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மோர் மாவட்டம் கிரிபார் பகுதியில் தீபாவளி வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. இங்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் பாரம்பரியத்தின்படி, தீபாவளியன்று மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊர்வலமாகச் செல்கின்றனர். இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களின் ஒளியில் கிராமங்கள் ஜொலிக்க, இந்த தனித்துவமான தீபாவளிக் கொண்டாட்டம் அப்பகுதியின் பழமையான நாட்டுப்புறக் கலாசாரத்தையும் மரபையும் பறைசாற்றுகிறது.