Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சைவ சித்தாந்தம் குறித்த ... ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பத்து ஆண்டுக்கு பின் பக்தர்கள் வழிபாடு! ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
10:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மழை வேண்டி, கிராம மக்கள் நூதன வழிபாடு நடத்தினர். மனித உருவ பொம்மையை, பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டு எரித்தனர்.தட்டுப்பாடுதமிழகத்தில், கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில், நீர்நிலைகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால், பொள்ளாச்சி அருகேயுள்ள, நல்லூர் கிராம மக்கள், நேற்று முன்தினம், மழை வேண்டி நூதன வழிபாடு நடத்தினர்.பாடையில், மனித உருவ பொம்மையை வைத்து, அதன் மீது, விளக்கு ஏற்றினர்.கயிறு கட்டி, ஊர் முழுவதும் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். கிராம பெண்கள், விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையை சுற்றி வந்து, ஒப்பாரி வைத்து, மழை வேண்டி அழுதனர்.பின், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். வீடுகளில், சேகரிக்கப்பட்ட எண்ணெய், அதன் மீது ஊற்றப்பட்டது. இந்த நூதன வழிபாட்டில், சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்றனர்.நம்பிக்கைநல்லூர் கிராம மக்கள் கூறியதாவது:மழை இல்லாத காலங்களில், இது போன்று, உருவ பொம்மை செய்து வழிபட்டால், மழை வரும் என்பது நம்பிக்கை. 40 ஆண்டுகளுக்கு முன், முன்னோர்கள், இது போல் வழிபட்டுள்ளனர்.வழிபாடு முடிந்த சில நாட்களிலேயே மழை பெய்தது. தற்போது, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், இதை, மேற்கொண்டோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar