Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ... நாறும்புநாத சுவாமி கோயிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்! நாறும்புநாத சுவாமி கோயிலில் 14ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்காளம்மா பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2013
10:07

அலமாதி: செங்காளம்மா பரமேஸ்வரி கோவிலில், பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். சென்னை, செங்குன்றம் அடுத்த, அலமாதி பகுதியில், அகிலாண்டகோடி, பிரமாண்ட நாயகி செங்காளம்மா பரமேஸ்வரி கோவில் உள்ளது. கோவிலின் 2ம் ஆண்டு, சம்வஸ்சராபிஷேக பெருஞ்சோதி பெருவிழா மற்றும் தீமிதி திருவிழா இம்மாதம், 3ம் தேதி, கொடியேற்றுதல், அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும், 108 கலச அபிஷேகத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, எச்சாத்தம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் மஞ்சள் நீர் கொண்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், பால்குடம் அபிஷேகம் செய்தல், அம்மன் திருவீதி உலா, அக்கினி கப்பரை கரத்தில் ஏந்திய வண்ணம் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின. அம்மன் தீமிதி திருவிழா, 7ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், காளிவேடம் தரித்தும், தலையில் கரகம், வேப்பிலை ஏந்தியபடியும் பக்தர்கள் அம்மனை வேண்டிய படி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளும், பக்தி பரவசத்துடன் தீமிதித்து, அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், திரண்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar