Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி வாசம் செய்யும் இடம் எது ... விளங்காத மர்மத்தை விளக்கும் யோக வசிஷ்டம்! விளங்காத மர்மத்தை விளக்கும் யோக ...
முதல் பக்கம் » துளிகள்
குளிகன் சேர்க்கையால் ஏற்படும் நன்மை தீமைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
12:08

மந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு ! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதகாதேசம், ஜாதக பாரிஜாதம் முதலான ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன.

சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல், பாப கிரகங்களில் அடங்குபவன்; ஆகவே, குளிகன் இருக்கும் ராசிநாதன், அவன் சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். உதாரணமாக, குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், ஆண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் கணவனை இழப்பாள் என்றும் சொல்வர் (மாந்திராசீச்வரோவா). திருமணப் பொருத்த விஷயத்தில், கேரள அறிஞர்கள் இன்றைக்கும் குளிகனையும் சேர்த்துப் பலன் சொல்கின்றனர். அனுதினமும் குளிகன் உதிக்கும் வேளையை நாம் தவிர்ப்போம். ராகு கால அட்டவணை போல், குளிகை கால அட்டவணையையும் குறிப்பிடுகிறது பஞ்சாங்கம். நல்ல காரியங்களுக்கு ராகுவைத் தவிர்ப்பது போல், குளிகனையும் தவிர்ப்பது உண்டு. முகூர்த்த சாஸ்திரம், குளிகை காலத்தைத் தவிர்க்கச் சொல்கிறது. முற்பிறவியின் கர்மவினைப் பலனை, காலம் அதாவது வேளை நம்முடன் இணைக்கும். காலத்துடன் இணைந்த மாந்தி எனப்படும் குளிகனுக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவதில் பங்கு இருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் அவனையும் கவனிப்பது பொருந்தும். சனியின் புதல்வன் குரூரன், துஷ்டன்; எதையும் அழிக்கும் இயல்பு கொண்டவன்; பாம்பு வடிவில் தோன்றுபவன்; கண்ணுக்கு இடுகிற மை நிறத்தில், கருநீல நிறத்திலானவன். வட்ட முகமும், சிவந்த கண்களும், நீண்ட பற்களும் (த்ம்ஷ்ட்ரம்) கொண்டு, பயமுறுத்தும் தோற்றத்தைக் கொண்டவன் என்கிறது ஹோரா சாஸ்திரம். அவனால் ஏற்படும் இன்னல்களை அகற்ற குளிக சாந்தியைப் பரிந்துரைக்கின்றன பரிகார நூல்கள். அவனுடைய காயத்ரியைச் சொல்லி (குளிக காயத்ரி) வழிபட்டால் நன்மை என்கிறது சாந்திமயூகம்.

பிரஸ்னம் எனும் ஜோதிடப் பிரிவு, குளிகஸ்புடத்தைச் சேர்த்துப் பலன் சொல்கிறது. மரணத்தை வரையறுக்க, மரண குளிகனைக் கவனித்து முடிவு எடுப்பார்கள். த்ரிஸ்புடம் எனும் பிரிவில் குளிகஸ்புடத்துக்கும் பங்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை, சூரியோதயத்தில் இருந்து 26 நாழிகையில் தோன்றுவான் குளிகன். நான்கு நாழிகை குறைந்து, அடுத்தடுத்து வரும் கிழமைகளில் (26ல் இருந்து 22, அடுத்து 18,14,10,6,2) என சனிக்கிழமை வரை உதயமாகும் வேளையை அறிந்து, ஜாதகத்தில் இருக்கும் ராசியில் இடம் பிடித்துவிடுவான். அவன், லக்னத்தில் இருந்தால் சிந்தனை வளம் குறையும்; பாப கிரகத்துடன் இணைந்தால், ஏமாற்றுபவனாக மாறுவான்; அதிக ஆசையால் சிக்கித் தவிப்பான். இரண்டில் இருந்தால், புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் முனைப்புக் காட்டுவான். அங்கே, பாப கிரகத்துடன் இணைந்தால், ஏழ்மையில் தவிக்கச் செய்வான். 3ல் இருந்தால், அந்த ஜாதகதாரர் மிதப்புடன் தென்படுவார்; உடன்பிறந்தாரை இழப்பார்; பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவார். தேக ஆரோக்கியமின்றி இருப்பார். 4வது வீட்டில் தென்பட்டால், கல்வி, மகிழ்ச்சி, வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வான். 5ல் இருந்தால், மனதின் பலத்தை இழக்க நேரிடும்; தவறான செயல்களில் ஈடுபடுவர்; பிள்ளைச் செல்வத்தைக் குறைத்து விடுவான் குளிகன். 6ல் இருந்தால், எதிரிகளை அழிப்பான்; செப்படி வித்தை, மாயாஜாலம் ஆகியவற்றைக் கையாள்வான். 7ல் இருந்தால், சண்டைச் சச்சரவை ஏற்படுத்துவான். தரம் தாழ்ந்த மனைவியைப் பெற நேரிடும்; செய்நன்றியை மறக்கச் செய்வான். 8ல் இருந்தால், கண்கள் மற்றும் முகத்தின் அழகை இழக்க வாய்ப்பு உண்டு. 9ல் இருந்தால், தந்தை மற்றும் பெரியோரை வெறுக்க நேரிடும். 10ல் இருந்தால், சூடுசொரணை இல்லாதவராக மாற்றுவான்; தரத்துக்குச் சம்பந்தமில்லாத வேலையில் காலம் கடத்துவான். 11ல் இருந்தால், செல்வம், புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு, பெருந்தன்மை, சமூக அங்கீகாரம் ஆகியவற்றை அளிப்பான். 12ல் இருந்தால், ஆண்டியின் நிலையை ஏற்படுத்துவான்; அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவான். குளிகன், 11ல் மட்டும் நல்லவன்; மற்ற வீடுகளில் அவன் கெடுதலையே வழங்குவான் எனச் சுருக்கமாகச் சொல்வர். 11ல் அவன் ஆகலாம்; மற்ற பதினொன்றில் அவன் ஆகா என்கிற சொல்வழக்கு உண்டு. ஆனால் ஒன்று... அவனுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையில், குளிகை பலம் மாறுபடும் என்பதை மறக்கக்கூடாது.

வலுவான கிரகங்களுடன் இணையும்போது, குளிகனின் பலன் மங்கிவிடும். ஷட்பலம், ÷ஷாடசபலம் ஆகியவற்றை ஆராயும்போது, குளிக பலனின் மாற்றத்தை அறியலாம். ஆழமான சிந்தனையின் அடிப்படையில், கிரகங்களின் தராதரத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, கூட்டுப்பலனை வெளியிடும் தருணத்தில், குளிக பலன் மாறுபாட்டைச் சந்திக்கும். குளிகன், சூரியனுடன் இணைந்தால், தகப்பனை வெறுப்பான்; சந்திரனுடன் இணைந்தால், தாயாருக்குத் துயரத்தைத் தருவான். செவ்வாயுடன் இணைந்தால், சகோதரனை இழப்பான்; அல்லது, வெறுப்பான். புதனுடன் இணைந்தால், மனநலம் குன்றும்; குருவுடன் இணைந்தால், நன்னடத்தை மறையும். சுக்கிரனுடன் இணைந்தால், தரம்தாழ்ந்த மனைவியுடன் வாழ்வான்; தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கையில் தனது உடல்நலனை அழித்துக் கொள்வான். சனியுடன் இணைந்தால், உலகவியல் இன்பத்தை அனுபவிப்பான். ராகுவுடன் இணைந்தால், ஈவு இரக்கம் இல்லாதவனாக மாறி, விஷம் வைத்து பிறரை அழிக்கவும் துணிவான். கேதுவுடன் இணைந்தால், நெருப்பு மூட்டிப் பொருட்களை அழிக்கவும் தயங்கமாட்டான். அவனது முடிவும் சில தருணங்களில் நெருப்பில் சேர்ந்துவிடும்.

குளிகன் இருக்குமிடத்தில் எந்த நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில் விஷக் கடிகையும் சேர்ந்திருந்தால், அரசனும் ஆண்டியாவான். குளிகோதய வேளையின் சேர்க்கை, பல கிரகங்களின் பலன்களை மாற்றி அமைக்கக் காரணமாகிறது. கண்ணில் இருக்கும் விழி சற்றே நகர்ந்திருந்தால், முகத்தின் மொத்த அழகையும் பாதிக்கும். திக்குவாய் சொல்லழகை இழக்கச் செய்யும். நீளமான கழுத்து, உடலழகை பாதிக்கும். ஏழ்மை வாட்டி வதைக்கும்போது, புத்திசாலியும் தவறு செய்வான். அதுபோல் குளிகனின் சேர்க்கை, விபரீத பலனையே தரும் என்பது ஜோதிடத்தின் கணிப்பு. குளிகனுடன் இணைந்த புதன், குளிக ராசிக்கு உடையவன் புதன் அல்லது குளிக ராசிக்கு உடையவனுடன் (மற்ற கிரகங்களுடன்) புதனின் சேர்க்கை, பார்வை ஆகியன இருப்பின், மன நலம் அற்றவர்களாக மாற்றிவிடும். அறிவு, சிந்தனை வளம் பெருக, புதனின் பங்கு உண்டு. அங்கு குளிக சேர்க்கை மன வளத்தைச் குன்றச் செய்யும். படிப்பில் ஈடுபாடு இன்மை, பாடங்கள் மனதில் பதியாதது, பதிந்தது நினைவுக்கு வராமல் தடுமாறுவது, அபஸ்மாரம், காக்காவலிப்பு, ஆராயும் திறன் இல்லாத நிலை, பிறருடன் இயைந்து பழக முடியாத குணம், எதிலும் பயம், பதற்றம், நம்பிக்கையின்மை ஆகிய அனைத்தும் குளிகன் சேர்க்கையில் விளையும் என்கிறது ஜோதிடம்.

பல விஷயங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பவர் கூட, குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் சுணக்கத்துடன் இருப்பார்கள். உலகவியலில் கொடிகட்டிப் பறப்பவன், தாம்பத்தியத்தில் சூன்யமாக இருப்பான். மேதைத்தனம் குன்றி, எதையும் கிரகிக்கும் தகுதியை இழந்து, குழந்தை போல் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பார்கள். இவை எல்லாமே குளிகனின் செயல்கள்தான் ! மனதில் தோன்றும் எண்ணங்களையும், நிகழ்வுகளையும் வெளியே இருப்பதாக நினைத்து மனம் கலங்கும். நிலையும் அவனது சேர்க்கையில் நிகழும். இல்லாத சப்தம் காதில் விழுவதாகச் சொல்லி, அந்த ஒலி தம்மைத் துன்புறுத்துவதாக நினைத்து மனப்பிரமையில் வாடும் நிலைமையும் அவனுடைய அட்டகாசம்தான் ! ஆக, மன வளத்தைப் பல கோணங்களிலும் சிதறடிக்கும் திறன் அவனுக்கு இருப்பதால், மனதை ஆராயும் விஷயத்தில் குளிகனைப் பற்றிய தகவலும் சரியான முடிவுக்கு உதவும். ஆகவே, அவனைச் சேர்த்துப் பலன் சொல்வது பொருந்தும். இதனை பிரச்னை மார்க்கம், பிரச்னானுஷ்டான பத்ததி போன்ற நூல்கள் பரிந்துரைக்கின்றன. காலத்தின் அறிவை ஜோதிடம் புகட்டும். காலத்தில் அடங்கியுள்ள அனைத்தும் அதன் வடிவத்தில் அடங்கும். குளிகனும் அதில் அடங்கியிருப்பதால், அவனையும் கவனித்து முடிவுக்கு வருவதே உத்தமம் என்றனர் முன்னோர்கள். அவனது செயல்பாடுகளையும் விளக்கியுள்ளனர். ராகுகேதுவுக்கு மற்ற கிரகங்களின் தகுதி இல்லையாயினும், காலத்துடன் அவை இணைந்திருப்பதால் சேர்த்துப் பலன் சொன்னார்கள். அதுபோல், குளிகனையும் சேர்த்தால் தெளிவான பலன் கிடைக்கும்; ஏமாற இடமிருக்காது !

ராகு காலத்தையும் குளிகை காலத்தையும் கவனித்துப் பழக்கப்பட்ட நமக்கு, பிறந்த வேளையில் குளிகன் இருப்பதால் விளைகிற நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவது எளிது. நவக்கிரகங்களைப் போல், குளிகனும் வழிபடுகிற கிரகமாக இருப்பதால், அவனை வழிபடுவது சிறப்பு. கும் குளிகாயநம: எனும் பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி, அவனுடைய உருவத்தை 16 உபசாரங்களுடன் வழிபடலாம். அதேபோல், மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத் எனும் செய்யுளைச் சொல்லி, 16 உபசாரங்களைச் செய்து வழிபடலாம். நீலாஞ்ஜனஸங்காசோ ரக்தா÷ஷாவிஷமபீஷணோதீர்க்க: பஞ்சாஸ்யா: பிருது தம்ஷ்ட்ரோ பயங்கர: ஸர்வதாகுளிக: என்று சொல்லி வணங்கலாம். சனியின் புதல்வன் குளிகன். எனவே, எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்றாடப் பணிகளில் சிக்கித் தவிக்கும் நாம், சனிக்கிழமையில் மட்டுமேனும் சனி பகவானுடன் சேர்த்துக் குளிகனை வழிபடலாம். உற்சாகத்தில் தினமும் வழிபட நினைத்துச் செயல்பட்டால், பிறகு நடுவில் வழிபாடு நின்றுவிடலாம். ஈடுபாடும் குறையும். ஆகவே, வாரத்தில் ஒருநாள், ஒரு வேளை.. சனியை வணங்கும் வேளையில் குளிகனையும் சேர்த்து வணங்கினால், பொறுமையுடன் வழிபடலாம்; இயலாதவர்கள், நீராடிய பிறகு குளிகன் காயத்ரியை 12 முறை ஜபித்தாலே போதுமானது !

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar