Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி கஞ்சி கலச ஊர்வலம்! சொக்கம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் தெப்ப உற்சவத்தில் மேளக்காரர்களை அனுமதிக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2013
10:10

உத்திரமேரூர்: உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தின் போது, மேளக்காரர்கள் தெப்பத்தில் அமரும் வழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, கோவில் பணி செய்யும் மேளக்காரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உத்திரமேரூரில் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 1978ம் ஆண்டு வரை தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வந்தது. 34 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2012ம் ஆண்டு தெப்ப உற்சவம் நடந்தது. தெப்ப உற்சவ விழாவின் போது வழக்கமாக தெப்பத்தில் அமர்ந்து அவரவர் பணியில் ஈடுபட கோவில் பணியாளர்கள், மேளக்காரர்கள் மற்றும் தெப்பம் செலுத்துவோர் ஆகியோர் முன் வந்த போது, மேளக்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை, உதவி ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த கோவில் மரபுப்படி தெப்பத்தில், பிராமணர்கள், பர்வதராஜகுலம் (செம்படவர்) மற்றும் மேளக்காரர்கள் அமர்ந்து செல்வர். இதில் செம்படவர் தெப்பத்திற்கு துடுப்பு போட்டு இயக்குவர். மேளக்காரர்கள் லாளி, ஒடம், நோட்டு, ஆனந்த பைரவி உள்ளிட்ட ராகங்களை இசைப்பர். இவை மரபாக நடந்த நிலையில், கடந்த ஆண்டு தெப்ப உற்சவத்தில் மேளக்காரர்கள் தெப்பத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தெப்ப உற்சவத்தில், மேளக்காரர்கள் அமர்ந்து இசைக் கருவிகளை வாசிக்க வசதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar