திருச்செந்தூரில் தங்கும் விடுதியை திறக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2013 11:10
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள மூவர் சமாதி அருகே கோவில் நிதியில் இருந்து ரூ.48 லட்சம் செலவில் 24 நவீன அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த விடுதிக்கான பணிகள் முற்றிலும் முடிந்து சுமார் ஒரு வருடம் ஆகிறது. ஆனாலும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக புதிய விடுதி திறக்கப்படாமல் உள்ளது. கந்தசஷ்டி திருவிழா வருகிற 3–ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகம், கோவில் உள்பிரகாரம், வெளிபிரகாரம், விடுதிகள் போன்ற இடங்களில் விரதம் இருந்து சுவாமியை வழிபடுவார்கள். கோவில் மற்றும் தனியார் விடுதிகளில் இடம் கிடைக்காதவர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து விரதம் இருந்து வழிபாடுவார்கள். எனவே கந்தசஷ்டி திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.