பதிவு செய்த நாள்
11
பிப்
2014
11:02
கிண்டி: ஈக்காட்டுதாங்கல், ராஜிவ் காந்தி நகரில், செல்வ விநாயகர், ஓம்சக்தி முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ராஜிவ் காந்தி நகரில், விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளுக்கு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன், பெரும் பொருட்செலவில், கோவில் கட்டினர். கோவிலின், மகா கும்பாபிஷேக விழா, நேற்று காலை, கோலாகலமாக நடந்தது.கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஆந்தகுடி கல்யாணசுந்தர சிவாச்சாரியார், கார்த்திகேய சிவாச்சாரியார் ஆகியோர், இரு நாட்களாக, பல்வேறு யாகங்களையும், பூஜைகளையும் நடத்தினர்.