இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் பாதயாத்திரை பக்தர்களுக்கு அறிவுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2026 07:01
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பழநி உட்கோட்ட போலீசார் அறிக்கை : பழநி பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக வர ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. பாதையில் தற்காலிக இலவச தங்குமிடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பின்னால் வரும் வாகனங்கள் அடையாளம் கண்டு மெதுவாக வர ஒரு லட்சம் ஒளிரும் கைபட்டைகள், ஒளிரும் குச்சிகள் தரப்பட்டு வருகிறது. சிமென்ட் பாதை மட்டும் பயன்படுத்த வேண்டும் . பாதை இல்லாத இடத்தில் ஒளிரும் ரிப்பன்கள் கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி சார்பில் சாலையோரங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன பக்தர்கள் இரவு 10:00 மணிக்கு மேல் நடப்பதை தவிர்த்து தங்குமிடங்களில் தங்கி காலையில் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.