நீண்ட நாட்களாக திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் செவ்வாய்க்கிழமையன்று எமகண்டத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்வித்து, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, தாலிக்கயிறு சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், பால்பாயசம், பானகம், செவ்வாழைப்பழம் படையலிட்டு; பெண்களாயின் ருது கால நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து சுமங்கலிகளுக்கு, மாங்கல்யக்கயிறு, மஞ்சள், குங்குமம், வஸ்திரம் தந்து அவர்களின் ஆசிர்வாதம் பெற்றால் தடை நீங்கி திருமணம் நடைபெறுமாம். வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு பாலபிஷேகம் செய்து நாகலிங்கப்பூ சார்த்தி, வாசனை திரவியம் பூசி, பால்சாதம், வடைமாலை, பால்பாயசம் படைத்து அர்ச்சனை செய்ய சர்ப்ப தோஷம் நீங்குமாம்.