Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! 43 அடி சிவ துர்கை அம்மன்  கும்பாபிஷேகம் கோலாகலம்! 43 அடி சிவ துர்கை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி குடவறை கோயில்கள் அதிசயம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
03:08

திருப்புத்தூர்: குடவறை கோயில்கள், நூற்றாண்டு பல கடந்தும், காலத்தால் அழியாதவை. பண்டைய கட்டட தொழில் நுட்பத்தை,கலைத் திறமையை, வரலாற்றை பதிவு செய்த முறையை நமக்கு பறை சாற்றுகின்றன. திருப்புத்தூர் பகுதியில்,பல குடவறைக் கோயில்கள் உள்ளன. அதில் குன்றக்குடியும் ஒன்று.முருகன் கோயில் அமைந்துள்ள, குன்றக்குடி மலையின் தென்மேற்கு அடிவாரத்தில் தான், தொல்லியல்துறை கட்டுப்பாட்டில்,1500 ஆண்டு தொன்மையான, நான்கு குடவறைக் கோயில்கள் உள்ளன. கீழக் கோயில் என்றழைக்கப்படும் இக்கோயில்கள் யானை நிற்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ளது. கி.பி.17 ம் நூற்றாண்டில்,வெங்களப்ப நாயக்கரால் கட்டப்பட்ட, அழகிய முன் மண்டபம் நம்மை வரவேற்கும். முதல் குடவறையில், சுந்தரேசுவரர்,பிரமாண்டமான சிவலிங்கமாகவும், இரண்டாவது குடவறையில், அண்ணாமலையார் சிவலிங்கமாகவும், முன்மண்டபத்தில், கருடாழ்வாருடன் பெருமாள் புடைப்புச் சிற்பமும்,பிரமாண்டமாக காட்சி தருகின்றன.

மூன்றாவது குடவறை,வண்ணச் சிற்பங்கள் மனதை அள்ளுகின்றன. மலைக் கொழுந்து நாதர், சிவலிங்கமாக மூலவராகவும், துவாரபாலகர்கள், வள்ளி, தெய்வானையுடன், முருகன், யோகநிலையில் விநாயகர் புடைப்பு சிற்பங்களும், மூலிகை வண்ணத்தால், சுதை வேலைப்பாடுகளுடன் உருவான குடவறை, பிரமாண்டமான, புடைப்புச் சிற்பங்களாக, கருடாழ்வாருடன் திருமால்,பிரம்மா,சிவன்,விஷ்ணு, அடியும், முடியும் ஆக காட்சி அளிக்கிறது. நான்காவது குடவறையில்,கோடாரி ஆயுதத்துடன்,  சண்டிகேஷ்வரர் அமர்ந்த நிலையில் உள்ளார். சிவலிங்கத்தை சுமக்கும் விநாயகர் மூன்றாம் குடவறையில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தோற்றத்தில், அமர்ந்த,யோகநிலையில், வலம்புரி விநாயகர் புடைப்பு சிற்பமாக உள்ளார். இந்த விநாயகர் தலையில், மூன்று சிவலிங்கங்களை சுமந்து காணப்படுகிறார். உலகில் வேறு எங்குமே, விநாயகர் இந்தத் தோற்றத்தில் காணப்படுவதில்லை என்பது சிறப்பாகும். தொன்மையான கல்வெட்டு: சிற்பங்கள் மட்டுமல்ல. கல்வெட்டுக்கள் மிகவும் பழமையானவை. இங்கு கி.மு.,மூன்றாம் நுõற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்துக்களாலான,குகைக் கல்வெட்டுக்கள் உள்ளன. மலையின் மேற்கே, பிராமிக் கல்வெட்டுக்களும், 9 சமணர் படுகைகளும் உள்ளன. குன்றக்குடி பஸ் ஸ்டாப் அருகில், சிறு பாதை மூலம் மலைக்கு சென்று, பிராமிக்கல்வெட்டுக்களையும்,சமணர் படுகைகளை பார்க்கலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, இக்கோயில்களை பார்வையாளர்கள் தரிசிக்கலாம். தகவல்களுக்கு : 04333- 274 205ல் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar