திருப்பூர் : தமிழக அரசு சார்பில், பூசாரிகளுக்கு ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நலத்திட்டங்களை பெற, பூசாரிகளின் வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இதற்கான வருமானச்சான்று, தாசில்தார் அலுவலகங்களில் வழங்கப்பட்டதால், நலத்திட்டங்களை பெற்று பயனடைந்தனர்.தனி நபர் ஆண்டு வருமானத்தை அரசு உயர்த்தியது. இதனால் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள், பூசாரிகளின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை என, வருமானச்சான்று வழங்குகின்றனர். உயர்ந்த தொகை வரு மான சான்றிதழை, இந்து சமய அறநிலையத்துறை ஏற்காமல் நிராகரிக்கும் நிலை உள்ளது. நல வாரியம் மூலம் நலத்திட்டங் கள் மற்றும் ஓய்வூதியத்தை எளிதாக பெறும் வகையில், வருமான உச்ச வரம்பை நீக்க வேண்டும் என, பூசாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.