கல்யாணசுந்தரர் கோயில் மண்டபத்தில் நாயக்கர் கால கல்வெட்டு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2015 11:01
மதுரை: மதுரை அவனியாபுரம் கல்யாணசுந்தரர் கோயில் முன் மண்டபத்தில் திருமலை நாயக்கர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.இக்கல்வெட்டை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆத்மநாதன், உதயகுமார் கண்டறிந்தனர்.மையச் செயலாளர் சாந்தலிங்கம் கூறியதாவது:கி.பி., ௧௬௩௪ம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு திருமலை நாயக்கரின் நன்மைக்காக அவரது தம்பி முத்துகிருஷ்ண நாயக்கர் செய்த தர்மத்தை கூறுகிறது. இதன் மூலம் இக்கோயிலின் முன்மண்டபம் முத்துகிருஷ்ணப்பரால் கட்டப்பட்டது. என கூறலாம். சகஆண்டு குறிப்புடன் தமிழ் ஆண்டு, மாதம், நாள் மற்றும் பிற பஞ்சாங்க குறிப்புகளுடன் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் பித்தளைத் திருவாச்சிகளில் இரண்டு ஆவணங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒன்று கி.பி.,௧௮௮௬ம் ஆண்டைச் சேர்ந்தது. இதில் அவனியாபுரத்தின் இப்பகுதி பிள்ளையார்பாளையம் என ழைக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். சுப்பராம அய்யர் மகன் சீத்தாராம அய்யர் இந்த திருவாச்சி தீபத்தை கொடை அளித்தார் என பொறிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு நட்சத்திர தீபத்தை சுப்பராமய்யர் கொடுத்துள்ளார். இதன் எடை ௯௫௮ கிராம், என்றார்.