நபிகள் நாயகம் புதிய ஆடை ஒன்றை அணியும்போது அதன் பெயரைக்கூறி, அல்லாஹ்வே! நன்றியனைத்தும் உனக்கே! நீயே இதனை எனக்குஅணிவித்தாய்! நான் உன்னிடம் இதன் நன்மையை (எனக்கு அளிக்கும்படி) கேட்கின்றேன். மேலும் எந்த நோக்கத்திற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறதோ, அதன் நன்மையான அம்சத்தைக் கோருகிறேன். இந்த ஆடையின் தீமையை விட்டும் இதுஎந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டதோ, அதன் தீமையான அம்சத்தை விட்டும் உன் பாதுகாப்பில் என்னை நான் ஒப்படைக்கின்றேன், என்பார்.இதன் விளக்கத்தைக் கேளுங்கள்.ஆடையோ அல்லது வேறு பொருளோ... அதைத் தீமைக்கும் பயன்படுத்தலாம், நன்மைக்கும் பயன்படுத்தலாம். இறை நம்பிக்கையாளன் ஆடையை இறைவனின் வெகுமதியாகக் கருதுகிறான். மேலும், இந்தக் கொடை அவனுக்குக் கிடைத்ததற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். மேலும், இறைவனிடம்,நான் இந்தஅருட்கொடையைப்பயன்படுத்தும்போது தீய செயல் செய்துவிடக் கூடாது. எந்தத் தீய நோக்கத்திற்காகவும் இதனை பயன்படுத்தி விடக்கூடாது. மாறாக, இதனை நல்ல நோக்கத்திற்காகபயன்படுத்தும் நற்பேறு எனக்குக் கிடைக்க வேண்டும், என்று வேண்டுகிறான். அவன் இந்த பாணியில் சிந்திப்பது வெறும் ஆடையைப் பொறுத்தமட்டிலுமல்ல, ஒவ்வொரு அருட்கொடையையும்பெற்ற பிறகும்,இவ்வாறே சிந்திக்கிறான்.