Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் கோவிலில் கிருஷ்ண ... தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கஞ்சிக்கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2015
11:09

உடுமலை: உடுமலை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், நேற்று நகரில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது; நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை, சர்தார் வீதி, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் செயல்படுகிறது. வழிபாட்டு மன்றத்தில், ஆடிப்பூர கஞ்சிக்கலய பெருவிழா, செப்., 11ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது; மாலையில் கலச விளக்கு வேள்வி நடந்தது. தொடர்ந்து இருநாட்களாக, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான, கஞ்சிக்கலய ஊர்வலம், நேற்று காலை, 8:00 மணிக்கு, உடுமலை மாரியம்மன் கோவில் முன் துவங்கியது; மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். கோவில் முன் துவங்கிய ஊர்வலம், நெல்லுக்கடை வீதி, குட்டைத்திடல், தளி ரோடு, நகராட்சி ரோடு வழியாக நேருவீதியை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு, ராஜேந்திரா ரோடு வழியாக, சர்தார் வீதி, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டில் உள்ள வழிபாட்டு மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வல நிறைவில், கஞ்சி வார்க்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar