பதிவு செய்த நாள்
14
செப்
2015
11:09
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீபூமி நீளா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், 65ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் அவதரித்த தினமான, ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று, கிருஷ்ண ஜெயந்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருப்பூரில் உள்ள கிருஷ்ணன் கோவில், பாண்டுரங்கன் கோவில், வீரராகவப் பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராயபுரம் கிருஷ்ணன் கோவிலில், கடந்த சில நாட்களாக பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று, கோகு லாஷ்டமியை ஒட்டி, வெண்ணைத்தாழி அலங்காரத்தில், கிருஷ்ணர் அருள்பாலித்தார், பக்தர் கள் துளசி மற்றும் வெண்ணையை எடுத்து வந்து, கிருஷ்ணருக்கு சமர்ப்பித்து, வழிபட்டனர். இன்று நடக்கும் ஸ்ரீஜெயந்தி உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி, தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடை பெற <உள்ளது. நாளை காலை, 8:00 மணிக்கு, மஞ்சள் நீர் உ<ற்சவம், அன்னதானம் நடைபெறும்.
அவிநாசி: அம்மா பாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயாவில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. மாணவியர், கிருஷ்ண பஜனை பாடல்கள் பாடினர். எல்.கே.ஜி., முதல், இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, மாறுவேடப்போட்டி நடைபெற்றது. கிருஷ்ணர், சிவபெருமான், ஸ்ரீராமர், ஆண்டாள், மதுரை மீனாட்சி, சரஸ்வதி ஆகிய கடவுளர்கள்; சுவாமி விவேகானந்தர், பாரதியார், காந்திஜி, நேதாஜி, திருப்பூர் குமரன், வீரபாண்டிய கட்டபொம் மன், அப்துல் கலாம் ஆகிய தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வேடங்களில் குழந்தைகள் தோன்றினர். குழந்தைகளின் ஒவ்வொரு வேடம், அவர்களின் குறும்புகளை, பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். பிரிவு வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த குழந்தைகளுக்கு பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது. ஸ்ரீராமகிருஷ்ண அறக்கட்டளை தலைவர் அவி நாசிலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஹேமலதா வரவேற்றார். சிறப்பு வழிபாடு, கூட்டு பஜனைக்கு பின், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.