Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வயலூர் முருகன் கோவிலில் இன்று ... சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவானைக்காவல் கோவில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
12:07

திருச்சி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக கருதப்படும் சிறப்புமிக்கது, திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில். ஆண்டுதோறும் இங்கு ஆடிப்பூர தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு ஆடிப்பூர தெப்ப உற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆறாம் நாள் வரை அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் கேடயத்தில் புறப்பட்டு, நான்காம் பிரகாரத்தில் திருவீதி உலா வரும் வைபவம் நடக்கிறது. ஏழாம் நாளன்று, ரிஷப வாகனத்திலும், எட்டாம் நாளன்று சிம்ம வாகனத்திலும், ஒன்பதாம் நாள் வெள்ளி மஞ்சத்திலும் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நாளான 10ம் நாள் (ஆக., 2ம் தேதி) இரவு எட்டு மணிக்கு, அம்மனுக்கு ஏற்றி இறக்கும் பூஜை நடக்கிறது. ஆகஸ்ட் 4ம் தேதி மாலை 6.30 மணிக்கு, கோவிலின் உள் தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் அகிலாண்டேஸ்வரி, ஜெம்புகேஸ்வரர் ஸ்வாமிகள் எழுந்தருளி, ஐந்து முறை வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான  இன்று திருவள்ளூர் வீரராகவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar