Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வவ்வால்கள், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வவ்வால்கள், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

05 நவ
2026
10:11

கருமத்தம்பட்டி: பட்டாசு வெடிக்காமல், புத்தாடை, இனிப்போடு மட்டும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் கிட்டாம்பாளையம் கிராம மக்கள். தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது தான் வழக்கம். ஆனால், கருமத்தம்பட்டி அடுத்து உள்ள கிட்டாம்பாளையம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர்.


ஊரின் மையப்பகுதியில் உள்ள மரங்களில், நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருவதுதான் பட்டாசு வெடிக்காததற்கு காரணம் என்கின்றனர் அவர்கள். ‘‘வெடிச்சத்தத்தால் சிட்டுக்குருவிகள், காகம், புறா உள்ளிட்ட பறவைகள் மற்றும் வவ்வால்களின் வாழ்வு பாதிக்கக்கூடாது என்பதற்காக பட்டாசு வெடிப்பதை தவிர்க்கிறோம். பட்டாசு வெடித்து யாருக்கும் வரவேற்பு கூட அளிப்பதில்லை. கோயில் திருவிழா, திருமணம், இறுதியாத்திரையின் போது கூட பட்டாசு வெடிப்பதில்லை’’ என்று வேறு சிலர் கூறினர். முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரசேகர் நமது நிருபரிடம், ‘‘ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், தனியார் பங்களிப்பில் இதுவரை, 6,000 மரக்கன்றுகளை நட்டு, பல இடங்களில் சிறு வனங்களை உருவாக்கி உள்ளோம். இதன்மூலம், பறவையினங்களின் பெரிய வாழ்விடமாக கிட்டாம்பாளையம் உருவாகும். கிராம மக்களும் ஒத்துழைக்கின்றனர்’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூரம் ஜென்ம திருநாள் விழாவையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar