Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை பார்த்தசாரதி கோவிலில் ... நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்! நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு

பதிவு செய்த நாள்

17 டிச
2015
10:12

திருநெல்வேலி: தென்காசி வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன், கேரளமாநிலம் அச்சன்கோயிலில் அரசராக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டு தோறும் சபரி சீசனில் உற்சவவிழா நடக்கும். அச்சன்கோவில் உற்சவ விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழாவில் ஐயப்பன், கருப்பனுக்கு திரு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதற்கான ஆபரணங்கள் அடங்கிய பெட்டி கேரள மாநிலம், புனலூர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது பலத்த பாதுகாப்புடன் அச்சன்கோவில், ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. புனலுார், அச்சன்கோயில் ஆகியன கேரள மாநிலத்தின் வனப்பகுதிகளில் அமைந்திருப்பதால், பாதுகாப்பு கருதி, நெல்லை மாவட்ட எல்லை வழியாக கொண்டுசென்றனர்.தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பாக கொண்டுவரப்பட்ட ஆபரணப்பெட்டிக்கு பொதுமக்கள் வரவேற்பளித்தனர். ஆபரணப் பெட்டியில் ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள், கால்கள், கவசம், வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் முன்பாகவும், தொடர்ந்தும் போலீசார் பாதுகாப்பிற்கு உடன் வந்தனர். அச்சன்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 25ம் தேதி தேரோட்டமும், 26ம் தேதி ஆராட்டுவிழாவும் நடக்கிறது. 27ம் தேதி உற்சவ விழாநிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar