பதிவு செய்த நாள்
09
பிப்
2016
12:02
புதுச்சேரி: வைத்திக்குப்பம் அக்காசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. வைத்திக்குப்பம் அக்காசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. விழானை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணிய ஹாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இன்று (9ம் தேதி) காலை கஜ பூஜை, அஸ்வ பூஜை,கோ பூஜை, தன பூஜை, லட்சுமி ஹோமம் நடக்கிறது. 10ம் தேதி வாஸ்துசாந்தி, அஷ்டதிக்பலி, அங்குரார்பணமும், மாலை 4:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்குகிறது. தொடர்ந்து 11ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்குகிறது. துவார பூஜை, மூல மந்திர ஹோமம் நடக்கிறது. 12ம் தேதி காலை 6:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடும், 9:45 மணிக்கு ராஜகோபுர மூலவர் விமானத்திற்கும், 10:00 மணிக்கு பரிவார தேவதை மற்றும் அக்காசுவாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.