அமாவாசை முன்னிட்டு கருப்பசாமி கோவிலில் கத்தி மேல் நின்று வாக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 01:02
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, தை அமாவாசையை முன்னிட்டு கத்தி மேல் நின்று, அருள்வாக்கு சொன்ன கருப்பசாமி கோவிலில் கூட்டம் அலைமோதியது. நாமகிரிப்பேட்டை அடுத்த, கொங்களம்மன் கோவில் அருகே சண்டி கருப்பசாமி, நாக கன்னி கோவில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும், அமாவாசையன்று சிறப்பு பூஜையும் நடப்பது வழக்கம். நேற்று தை அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பூசாரி ராஜேந்திரன், கருப்பசாமி வேடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரண்டு கொடுவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு வாக்கு கூறினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுற்று வட்டார மாவட்டங்களில் எராளமானவர்கள் வந்திருந்தனர். இதேபோல், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில், ஒடுவன்குறிச்சி காளியம்மன் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது.