Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாமகத்திற்கு கும்பகோணம் தயார் 13ல் ... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலர்களால் ஆன சுவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2016
11:02

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. பிப். 22 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயில் ராகுகேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள தனி சன்னதியில் ராகுவும் கேதுவும் தம்பதி சகிதமாய் எழுந்தருளியுள்ளனர். கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்ற பெயர் பெற்றது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஆறு ஓடுவதும், அதன் கரையில் கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பதும் காசிக்கு அடுத்து இங்கு மட்டுமே என்றும் கூறுகின்றனர். இக்கோயில் மாசிமக தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நகரின் எண் திக்கிலும் பூசணிக்காய் அறுத்து படையல்படைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். சுவாமி, அம்மனும் வீதிஉலா வருவர். பிப்.21ல் திருக்கல்யாணம், பிப். 22 பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar