மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசி தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேச்சேரி பத்ரகாளியம்மன் மாசி தேரோட்டம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று மாலை 5 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. விநாயகர் தேர் முதலில் செல்ல, பத்ரகாளியம்மன் சிறிய தேர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்து இரவு நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் மேச்சேரி, சுற்றுப்பகுதியை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள், பக்தர்கள் செய்தனர். இன்று மாலை, 5 மணிக்கு பத்ரகாளியம்மன் பெரிய தேர் புறப்பாடு நடக்கிறது.