Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சூரிய கிரகணம்: பரிகார பூஜை யாருக்கு? சூரிய கிரகணம்: பரிகார பூஜை யாருக்கு?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 170வது உழவாரப்பணி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2016
12:03

சென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள  கோவில்களில் 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய  பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், சுவாமியின் வாகனங்கள், வஸ்திரங்கள் சுத்தம் செய்தல், பூஜை பொருள்கள் துலக்குதல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதுவரை 169கோவில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது.

இந்த உழவாரப்பணியில்  400க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம். வருகிற 27.3.2016ம் தேதி ஞாயிறன்று  சிறுவாபுரி அகத்தீஸ்வரர் திருக்கோயில், வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 170 வது  உழவாரப்பணி நடைபெற இருக்கிறது.  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி. மதியம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல். தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு. அதன்பின் அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்படுவார்கள்.

தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar