Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசி மகா சிவராத்திரி விழா கோவிலில் ... சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூச்சியூர் சிவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
01:03

பெ.ந.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள, பூச்சியூரில் சிவராத்திரி விழா, விமரிசையாக நடந்தது. பூச்சியூரில் அருள்மிகு மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி, வீரபத்திரர் - தொண்டம்மாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை, ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கும். இந்தாண்டு நேற்று காலை, கோவிலுக்கு அருகே மைதானத்தில் இருந்து அருள்மிகு மகாலட்சுமி, வீரபத்திரர் -- தொண்டம்மாள், வேட்டைக்காரசாமி ஊர்வலம் துவங்கியது. இதில், கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்பு அணிந்து நடந்து வந்தார்.சுவாமிகள் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்இவ்விழாவில், தரையில் படுத்துக் கொள்ளும் பெண்கள் மீது, பூசாரி ஆணிக்கால் செருப்புடன் நடப்பது வழக்கம். இச்சடங்கு மனித உரிமை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதால், 14 ஆண்டுகளாக இச்சடங்கு நடைபெறுவதில்லை.இதற்காக ஆண்டுதோறும் விழாவின் போது, போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். நேற்று, தரையில் பெண்கள் உருளாமல் இருக்க, பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில்  மீனாட்சி திக்குவிஜயம் செய்கிறாள். ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர்., ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar