கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சூலுார் : சூலுார் மேற்கு அங்காளம்மன் கோவிலில், முப்பெரும் விழா நேற்று நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு வழிபாடு, பேரூர் இளையபட்டம் மருதால அடிகளார் தலைமையில் நடந்தது. சின்ன தொட்டிபாளையம் அருணை அருள்முருகன் அடிகளார், முன்னிலை வகித்து விளக்கு பூஜையை நடத்தினார்.ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். இரவு, 8:30 மணிக்கு, சிவராத்திரி விழாவும், குலதெய்வ வழிபாடும் நடந்தது. நேற்று காலை, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.