கண்டாச்சிபுரம்: கன்னிமார் கோவிலில் கரக ஊர்வலம் நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த இருளர்பாளையம் குடியிருப்பில் உள்ள, கன்னிமார் கோவிலில் மழை வேண்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10 மணி முதல் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் வேப்பிலை கரக ஊர்வலம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர்.