சிரவண மாதம்: வடமாநில கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜை!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2016 11:07
தமிழகத்தில் ஆடி மாதத்தைப்போன்று, வட மாநிலங்களில் சிரவண மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமை, மிகவும் விஷேசமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி நேற்று(ஜூலை 25) அலகாபாத்தில் ஏராளமான பக்தர்கள் சிவனுக்கு தீப ஆராதனைகளை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற வடமாநிலங்களில் சிரவண மாதத்தையொட்டி, கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.