வடலுார்: குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வீதி யுலா நடந்து வருகிறது. இன்று (12ம் தேதி) செடல் விழா நடக்கிறது. அதனையொட்டி, இரவு அம்மன் தேரில் எழுந்தருளல் நடைபெறும். நாளை 13ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 14ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், தீர்த்தவாரி நடக்கிறது.