பதிவு செய்த நாள்
12
ஆக
2016
12:08
கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு நாத உற்சவ விழா வரும், 14ம் தேதி நடக்கிறது. அப்போது, 108 தவில் மற்றும், 108 நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பங்கு பெறும், நாத உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
கரூர் மாவட்டம், காவிரிக்கரையோரம், நெரூர் பிரம்மேந்திராள் அதிர்ஷ்டானம் அமைந்துள்ளது. இங்கு, அக்னீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அக்னீஸ்வரருக்கு வரும், 14ம் தேதி நாத உற்சவ விழா நடக்கிறது. அன்று காலை, 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடக்கிறது. காலை, 8 மணிக்கு சாய் சங்கீதாலயா இசைப்பள்ளி மாணவர்கள் சார்பில், வீணையில் பக்தி இசைநிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10 மணிக்கு திருமுதுகுன்றம், சண்முகத்திருமுதுகுன்றம், சண்முகத் திருவரங்கயாதி ஓதுவார், குமாரவயலூர் திருஞான பாலச்சந்திரன் குழுவினரின், பன்னிரு திருமுறை இசை நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், 2 மணிக்கு பழனி வெங்கடேசன் ஓதுவார் குழுவினரின் தேவாரம் மற்றும் திருப்புகழ் இசை நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு, 108 தவில் மற்றும் 108 நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பங்கு பெறும் நாத உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அக்னீஸ்வரர், சவுந்தரநாயகி, சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில், நாத உற்சவத்தை முன்னிட்டு, காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.