பதிவு செய்த நாள்
31
ஜன
2017
02:01
திருவாரூர்: பேரளம் அருகே, திருமீயச்சூர் லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவிலில், பிப்., 2ல், தேரோட்டம் நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருமீயச்சூரில், வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான, லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். கடந்த, 24ம் தேதி, விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி பூஜைகளுடன், பிரம்மோற்சவ விழா துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், முதல் நாளான நேற்று காலை, துவஜாரோஹணம், இரவு திக்பந்தனம் நடந்தது. வரும் பிப்., 1ல், குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவாக, 2ம் தேதி காலை, 9:00க்கு மேல், 10:30 மணிக்குள், தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி, சண்டிகேஸ்வர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.