சோலைமலை முருகன் கோயில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2017 05:01
அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோயில் தைப் பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் பிப்.,8ல் நடக்கிறது. அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமைல முருகன் கோயில் தைப் பூச விழா காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
பகலில் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையும், தொடர்ந்து பூத வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் கோயிலை வலம் வந்தார். நாளை(பிப்.1) முதல் தினமும் காலை 7, மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து உற்சவருக்கு மஹா அபிஷேகம், ஆராதனை முடிந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் முருகப் பெருமான் கோயிலை வலம் வருகிறார். முக்கிய விழாவான தேரோட்டம் பிப்., 8ல், காலை 11 மணிக்கு தங்கத் தேரில் எழுந்தருளும் முருகப் பெருமான் கோயிலை வலம் வருகிறார். மாலை 6 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பிப்., 9ல் தீர்த்தவாரியும், தொடர்ந்து மஹா அபிஷேகம், மாலையில் கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.