செஞ்சி: செஞ்சி கிருஷ்ணர் கோவிலில் புதிய மூலவர் சிலை பிரதிஷ்டை செய்தனர். செஞ்சி சிறுகடம்பூர் ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் இதுவரை சாமி படங்களையும், உற்சவர் சிலையையும் வழி பட்டு வந்த நிலையில், புதியதாக ராதா, ருக்மணி, கிருஷ்ணர் கற்சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. தொடர்ந்து ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு மகா சம்ப்ரோஷணமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னாதனம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.