பதிவு செய்த நாள்
15
மார்
2017
01:03
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் உற்சவ மூர்த்திகளுடன், பச்சை குளத்தில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, 1,000 ஆண்டுகள் பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 5ல் துவங்கி நடந்து வருகிறது. 11 இரவு, 9:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. 12 காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு வசந்தோற்சவம், இரவு, 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் உற்சவ மூர்த்திகள், தேர்ப்பேட்டை தெப்பக்குளத்தில், மூன்று முறை வலம் வந்தனர். பின், தெப்பக்குளத்திற்குள் உள்ள மண்டபத்தில், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தெப்பக்குளத்தில் உப்பு, மிளகு போன்றவற்றை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மார்ச், 15) இரவு, 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கு உற்சவம், நாளை (மார்ச், 16) இரவு, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு, 17 இரவு, 7:00 மணிக்கு பல்லக்கு உற்சவம், 18 இரவு, 7:00 மணிக்கு, பிரகார உற்சவம், 19 இரவு, 7:00 மணிக்கு சயனோற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.