Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரையூர் கோயில் பொங்கல் விழா ஐயப்பன் கோவிலில் சேவை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமல விநாயகருக்கு 29ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2017
01:11

ஆர்.கே.பேட்டை : விளக்கணாம்பூடியில் புதுப்பிக்கப்பட்டுவரும் கமல விநாயகர் கோவிலில், 29ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான யாகசாலை பூஜை, 27ல் துவங்குகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி கிராமத்தில் அமைந்துள்ளது கமல விநாயகர் கோவில். இந்த கோவில் புனரமைப்பு பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. கோவில் சுற்று பிரகாரம் மற்றும் விமான கோபுரம் அமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பங்களிப்புடன் நடந்துவரும் இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 29ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

இதற்கான யாகசாலை பூஜை, 27ல் கணபதி பூஜையுடன் துவங்குகிறது.அன்று மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தனம், பூர்ணாஹூதி நடக்கிறது. மறுநாள் காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜையும், மாலை 6:00 மணிக்கு, அஷ்டபந்தனம் சாற்றப்படுகிறது. வரும் 29ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு ஆகின்றன. காலை, 10:15 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் பெருமான், வீதியுலா எழுந்தருளுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar