பதிவு செய்த நாள்
13
நவ
2017
01:11
ஈரோடு: சபரிமலையில் பக்தர்களுக்கு சேவை செய்ய, அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின், மாநில அமைப்பு ஆண்டு தோறும் கல்லூரி என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., மாணவர்கள், இளைஞர்களை தேர்வு செய்து, சபரிமலை சேவை முகாமுக்கு அனுப்புகிறது. நடப்பாண்டு, ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளவர்கள், நவ., 15, 25, டிச.,5, 15, 30, ஜன.,10 என, ஆறு பகுதிகளாக அனுப்பி வைக்கப்படுவர். இவர்கள், சபரிமலையில், 11 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம், ஸ்ட்ரெச்சர் தேவை, ஆக்சிஜன் பார்லர் சேவை செய்யலாம். சேவை செய்ய விரும்பும் கல்லூரி மாணவர்ள், மூன்று ஸ்டாம்ப் சைஸ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கல்லூரி மூலமாக, அய்யப்ப சேவா சங்க உறுப்பினராக இருந்தால், நான்கு போட்டோ, தாங்கள் வசிக்கும் பகுதி இன்ஸ்பெக்டரிடம் சான்றிதழ், முகவரி சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.