திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2017 10:11
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.
காந்திமதியம்மன், சன்னதியில் கடந்த 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, இரவில் அம்மன் நான்கு ரத வீதிகளிலும் உலா நடந்தது. நேற்றுமுன்தினம் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
அம்மன் சன்னதியில் நெல்லையப்பர், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.காலை 9:30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடந்தது. நாளை 16ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழாவும், 17ம் தேதி இரவு சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப் பிரவேசம் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.