பதிவு செய்த நாள்
25
நவ
2017
01:11
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலத்தில், சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் இருந்து, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில், ஷீரடி சாய்பாபா, மகா கணபதி, காயத்ரி தேவி கோவில் உள்ளது. 12ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, சத்ய சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி கடந்த, 22ல் துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு தீபாராதனை, வாஸ்து ஹோமம், நெய்வேத்தியம், தீர்த்த பிரசாத வினியோகம் நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு ?ஹாமங்கள் நடத்திய பிறகு, கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.