Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எப்பநாடு ஈஸ்வரன் கோவில் விழா ... சவுண்டம்மன் கோவில் விழா: மகாஜோதி திருவீதி உலா சவுண்டம்மன் கோவில் விழா: மகாஜோதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 750 கிலோ காய், கனி அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 750 கிலோ காய், கனி அலங்காரம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
11:01

தஞ்சாவூர், மாட்டு பொங்கலையொட்டி, தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு, 750 கிலோவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயிலில், மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலைஉள்ளது.

இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.மாட்டு பொங்கலான நேற்று காலை அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், பலவகையான பழங்களாலும், இனிப்பு மற்றும் மலர்களாலும் நந்திபெருமானுக்கு, 750 கிலோ அளவிலான பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.மேலும், நந்திபெருமான் சிலை முன்பு, 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பின், நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar