சிவனை மூன்று வடிவங்களில் வழிபடலாம். ‘சத்’ எனப்படும் லிங்க வடிவிலும், ‘சித்’ எனப்படும் அனைத்தும் அறிந்த குருவான தட்சிணாமூர்த்தி வடிவிலும், ‘ஆனந்தம்’ எனப்படும் நடராஜர் வடிவிலும் அவரை தரிசிக்கலாம். சத்’ என்றால் ‘எப்போதும் இருப்பது’. ‘சித்’ என்றால் ‘எல்லாம் அறிந்தது. ‘ஆனந்தம்’ என்றால் ‘மகிழ்ச்சியை தவிர வேறு எதுவும் அறியாதது’. இதனால் தான் அவரை ‘சச்சிதானந்தம்’ என்பர். அவரை பசுபதி என்றும் பரமன் என்றும் அழைப்பர். ‘பசுபதி’ என்றால் ‘உயிர்களின் தலைவன்’. ‘பரமன்’ என்றால் ‘எங்கும் இருப்பவர்’.