Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலியுக ... பஞ்சமுக மஞ்சள் வாராஹி கோவிலில் பஞ்சமி திதி வழிபாடு பஞ்சமுக மஞ்சள் வாராஹி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 நவ
2025
10:11

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.


ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும்போது அர்த்தநாரீஸ்வரராக ஒளி வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமண தடை, பேச்சில் குறைபாடு மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு புண்ணிய ஸ்தலமாக இக்கோவில் உள்ளது. புனரமைக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி திஷா, சாந்தி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. நேற்று அக்னி சங்கிரஹணம், தீர்த்த சங்கிரஹணம், புண்ணியாக வஜனம் உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை சிவாச்சாரியார்கள் நாகராஜ், சோமு குருக்கள் தலைமையில் துவங்கியது. தொடர்ந்து இன்று வேதமந்திரங்கள் ஓத யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை 27ம் தேதி, காலை 9:30 மணியளவில் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை ஊர்பொதுமக்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar