கருவறையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் போது, திருஷ்டி ஏற்படாமல் இருக்க திரையால் மறைக்கின்றனர். மடப்பள்ளியில் தயாரான உணவு சுவாமிக்கு நைவேத் யமாக படைக்கப்படுகிறது. இந்த உணவை எட்டு பாகமாக பிரிப்பர். அதில் சிவனுக்கு 2, அம்மனுக்கு 2, முருகனுக்கு 1, பலிபீடம், அக்னி காரியத்திற்காக 1, அர்ச்சகருக்கு 1, பணியாளர்களுக்கு 1 என பிரித்து கொடுப்பர்.