பதிவு செய்த நாள்
28
பிப்
2018
01:02
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபி?ஷகம் நடந்தது. தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு, மாலை, 5:00 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்கும், இளநீர் உட்பட, பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், காரிமங்கலம் அபிதகுஜலாம்பால் சேமேஸ்வரர் கோவில்; பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவில், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.