Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு பூஜை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோனியம்மன் தேர் ஊர்வலம்; போக்குவரத்தில் மாற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2018
01:02

கோவை;கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம், 2:00 மணி முதல் தேரோட்டம் நடக்கிறது. இதையடுத்து மதியம், 12:00 முதல் இரவு, 8:00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: அவிநாசி ரோட்டிலிருந்து பழைய மேம்பாலம் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஜே.எம்., பேக்கரி சந்திப்பிலிருந்து இடது பக்கம் திரும்பி ரயில்வே ஸ்டேஷன் வழியாக அல்லது அரசு கலை கல்லுாரி ரோடு வழியாக கிளாசிக் டவர் சென்று வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து உக்கடம் செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ்கள், மரக்கடை, என்.எச்., ரோடு, டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும். பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடம் அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு, சுக்கரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் ரோட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக மரக்கடை, என்.எச்.,ரோடு அடைந்து உக்கடம் செல்லலாம்.

பொள்ளாச்சி ரோட்டிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் ரோடு வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். பேரூர் ரோட்டில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு சென்று கொள்ளலாம். லாரி போக்குவரத்து காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை நகருக்குள் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தேர் வரும் ரோட்டிலுள்ள ராஜவீதி, வைசியாள் வீதி, ஆர்.ஜி., வீதி, ஒப்பணக்காரவீதி, கே.ஜி., வீதி போன்ற பகுதிகளில் அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை தேர்வரும் ரோட்டில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar