பதிவு செய்த நாள்
01
மார்
2018
02:03
கோபி: கொடிவேரி அணை முனியப்பன் கோவிலில், பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி பக்தர்கள் வழிபட்டு சென்றனர். கோபி அருகே, கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், அணை முனியப்பன் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு, இக்கோவிலில், கொடிவேரி, கோபிபாளையம் பகுதியை சேர்ந்த, பக்தர்கள் குவிந்தனர். கோவில் முன் நிறுவப்பட்டுள்ள, கருப்பராயன் சுவாமி சிலைக்கு பூஜைகள் செய்தனர். பெண்கள் அனைவரும், அணை வளாகத்தில், பொங்கல் வைத்தனர். பின், இரு கிடாய்கள் வெட்டி வழிபட்டனர். இதனால், கொடிவேரி தடுப்பணை வளாகமே, நேற்று விழா கோலம் பூண்டிருந்தது.