கடலாடி: கடலாடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் சித்திரை சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் சிவசகஸ்ரநாம அர்ச்சனை, சிவபுராணம் பாடினர். புதிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.